IND vs SL: முக்கிய வீரரை கழட்டிவிட பிசிசிஐ முடிவு!
ஸ்ரீலங்கா தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒருநாள் தொடரில் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs SL: சேத்தன் சர்மா தலைமையிலான நீக்கப்பட்ட தேர்வுக் குழு, செவ்வாய்க்கிழமைக்குள் இலங்கை தொடருக்கான அணியை அறிவிக்க உள்ளது. ராகுல் டிராவிட் தலைமையில், ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும், ஒருநாள் தொடரில் மூவரும் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா டி20க்கு தலைமை தாங்குவார் என்றும் கூறப்படுகிறது. விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் டி20 தொடரில் இல்லை. அதே நேரத்தில் ரிஷப் பந்த்-ம் டி20 அணியில் இருந்து விளக்கப்பட உள்ளார்.
மேலும் படிக்க | பென் ஸ்டோக்ஸ்ஸை எடுக்க சிஎஸ்கே! தோனி என்ன சொன்னார் தெரியுமா?
“ரோஹித் இன்னும் 100% ஆகவில்லை, ஜடேஜா மற்றும் பும்ரா NCA க்கு திரும்பியுள்ளனர். அவர்களின் உடற்தகுதி நன்றாக உள்ளது, இருவரும் ஃபிட்டாக உள்ளனர். இந்த வாரம் அவர்களுக்கு காயம் மதிப்பீடு செய்யப்பட்டது மற்றும் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். ஜஸ்பிரித் முழு நேர பந்துவீச்சுக்கு திரும்பியுள்ளார். ஜடேஜாவும் மீண்டும் பந்துவீச்சைத் தொடங்கினார். உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்கள் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்" என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிப்ரவரியில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரவுள்ள நிலையில், ரோஹித்தின் கட்டைவிரல் முழுமையாக குணமாகிவிட்டதா என்பதை உறுதி செய்ய வாரியம் விரும்புகிறது. காயத்தில் இருந்து முன்னேறி வரும் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் தொடருக்கு திரும்புவார்.
ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு விளையாடவில்லை. முதுகில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து அவர் டி20 உலகக் கோப்பையிலும் இடம் பெறவில்லை. அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரிஷப் பந்த் தனது டெஸ்ட்-ல் சிறப்பாக ஆடினாலும் டி20களில் மோசமான இருந்து வருகிறார். இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படுவதால், இருவருக்கும் அங்கீகாரம் கிடைக்கும். இஷான் மற்றும் சஞ்சு இருவரும் தற்போதைய ரஞ்சி டிராபியிலும் ரன்களை எடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | 'நீ சட்டைய கழட்டு...' எதிரணி வீரரின் செயலால் கடுப்பான விராட் - என்ன நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ