'நீ சட்டைய கழட்டு...' எதிரணி வீரரின் செயலால் கடுப்பான விராட் - என்ன நடந்தது?

வங்கதேச வீரரின் செயலால் களத்தில் இந்திய வீரர் விராட் கோலி கடுப்பாகி செய்த செயலின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 24, 2022, 07:04 PM IST
  • இந்திய அணி 45 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது.
  • மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.
'நீ சட்டைய கழட்டு...' எதிரணி வீரரின் செயலால் கடுப்பான விராட் - என்ன நடந்தது? title=

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் முடிந்துவிட்டது. மொத்தம் 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்கள் ரூ. 167 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்கள். ஏலத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் சாம் கரனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ரூ. 18.50 கோடி கொடுத்து எடுத்தது. 

இதையடுத்து, ஐபிஎல் ஏலம் நடைபெற்ற வேளையில், மறுபுறம் நடந்துவரும் இந்திய வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் போட்டி கவனிப்பார் இன்றி காணப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்து, 87 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

இதையடுத்து, நேற்றைய ஆட்டநேரமுடிவில் வங்கதேசம், 7 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று ஆட்டம் தொடங்கியதில் இருந்து வங்கதேசம் சற்று நிதானம் காட்டி விக்கெட்டை கெட்டியாக பிடித்து விளையாடி வந்தது. இருப்பினும், அந்த அணியில் ஜாகிர் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோரை தவிர வேறு யாரும் சிறப்பாக செயல்படவில்லை. ஜாகிர் ஹசன் 51, லிட்டன் தாஸ் 73, நூருல் ஹாசன் 31, டஸ்கின் அகமது 31 ரன்களை எடுக்க வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 

மேலும் படிக்க | பென் ஸ்டோக்ஸ்ஸை எடுக்க சிஎஸ்கே! தோனி என்ன சொன்னார் தெரியுமா?

தற்போது, 145 ரன்கல் இலக்கு உடன் இந்திய பேட்டிங் செய்து வரும் நிலையில், தொடக்க வீரர்கள் கில், கேஎல் ராகுல், புஜாரா, விரோட் ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர். உனத்கட், அக்சர் படேல் ஆகியோர் இந்திய அணியை நைட் வாட்ச்மேனாக மீட்க போராடினர். அதன்படி, 3ஆம் நாள் ஆட்டநேரமுடிவில், இந்திய 45 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

முன்னதாக, இன்று வங்கதேச அணி பேட்டிங்கின்போது, நேரத்தை வீணடிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும், இன்று காலை சற்று வெளிச்சம் குறைவாக இருந்ததால் நேரத்தை கடத்த வங்கதேச வீரர் ஷாண்டா பலமுறை முயன்றதாக கூறப்படுகிறது. 

அதாவது, பெவிலியனில் இருந்து அனாவசியமாக பேட்டை எடுத்து வரச்சொல்வது, ஷூ லேசை கழட்டி மீண்டும் போடுவது என பல செயல்களை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்திய கேப்டன் எரிச்சலடைந்து கள நடுவர்களிடம் முறையிட்டுள்ளார். தொடர்ந்து, அஸ்வின், விராட் கோலி ஆகியோரும் இதனை கண்டித்துள்ளனர். 

ஷாண்டோ ஷூ லேசை கழட்டி மாட்டிவந்த நிலையில், ஸ்லிப்பில் நின்ற விராட் கோலி, பந்துவீச்சாளர் முனையில் இருந்த ஷாண்டேவை பார்த்து, 'இம்... இப்போது நீங்கள் சட்டையை கழட்டுங்கள்' என எரிச்சலடைந்து கூறியது கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர். 

மேலும் படிக்க | IPL Auction 2023:ஹைதராபாத் கொட்டிக் கொடுத்து தட்டி தூக்கிய இளம் வீரர்! கோடிகளில் மிதக்கிறார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News