INDvs WI: அதிரடி காட்டும் விராட் மற்றும் ரோகித்!
இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியா அணி 322 ரன்கள் குவித்துள்ளது!
20:07 21-10-2018
140(107) ரன்களுக்கு வெளியேறினார் விராட் கோலி!
தற்போதைய நிலவரப்படி 33 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் ஷர்மா 107(87) மற்றும் அம்பத்தி ராயுடு 0(0) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
19:43 21-10-2018
தற்போதைய நிலவரப்படி 28 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 110(91), ரோகித் ஷர்மா 79(73) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
19:12 21-10-2018
தற்போதைய நிலவரப்படி 21 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 85(71), ரோகித் ஷர்மா 49(49) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
18:49 21-10-2018
தற்போதைய நிலவரப்படி 15 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 62(53), ரோகித் 30(31) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியா அணி 322 ரன்கள் குவித்துள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கௌஹாத்தி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய கிரண் பவுள் 51(39) ரன்கள் என அணிக்கு பலம் சேர்த்தார். இவரை தொடர்ந்து வந்த ஷாய் ஹோப் 32(51), ஷிம்ராம் ஹெட்மையர் 106(78) என அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் மட்டும் இழந்து 322 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட், மொகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா தலை 2 விக்கெட், கலீல் அகமது 1 விக்கெட் எடுத்தனர்.
இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கவுள்ளது!