இளையோர்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி  4-வது முறையாகக் கோப்பையை வென்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி, நியூசிலாந்தில் உள்ள மவுன்ட் மவுங்குனி மைதானத்தில் நேற்று நடந்தது.


இதில், இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் இடையே மோதினர். முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.2 ஓவரில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.


பின்னர் களமிறங்கிய இந்திய அணி 38.5 ஓவரில் 220 ரன் எடுத்து அபார வெற்றியடைந்தது. இதன் மூலம், இந்த உலகக் கோப்பையை இந்திய அணி, நான்காவது முறையாகக் கைப்பற்றயது.


உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுகளை வழங்கியது.


தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு தலா 20 லட்சம், அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு தலா 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது


இது குறித்து சச்சின் கூறுகையில், இந்திய அணி `மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி, இந்திய அணி மற்றவர்களை விட தனித்து நின்றது என்பதைத்தான் காட்டுகிறது. பயிற்சிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்தியதற்கு பிசிசிஐ அமைப்பை பாராட்டியே ஆகவேண்டும்.


அண்டர் 19 டீம் நல்ல குழுவாக செயல்பட்டால்தான் பெரிய கனவுகளை அடைய முடியும். நமது வீரர்களை அவர்களை, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயார்படுத்தியுள்ளனர். சிறப்பாக திட்டமிட்டு அதை செயல்படுத்தியும் உள்ளனர். 



கடந்த 15 ஆண்டுகளில் கிரிக்கெட் விளையடும் முறை மாறியுள்ளது. இந்திய அணியின் பீல்டிங் நல்ல முன்னேற்றம் அடைந்ததற்குக் கூட காரணம், நல்ல உள்கட்டமைப்பு வசதி இருந்ததனால்தான்' என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். 


மேலும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரில், டிராவிட்டின் பயிற்சியின் கீழ், இறுதிப் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றிருந்தது. தவறுகளைச் சரிசெய்து, இந்த முறை டிராவிட்டின் இளம் படை கோப்பையை வென்று அசத்தியுள்ளது குறிபிடத்தக்கது.