ஐசிசி மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் தொடங்கியுள்ளது. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் பெண்கள் அணியை எதிர்கொண்டது. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் இறங்கியது.அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 12 ரன்களும், ஜவேரியா கான் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்து வந்த நிதா தார் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, சித்ரா அமீன் 11 ரன்னிலும் விக்கெட்டை பறி கொடுத்தார். 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் இருந்தபோது, கேப்டன் பிஸ்மா மாரூப் - ஆயிஷா நசீம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 



மேலும் படிக்க | INDvsAUS: இந்தியா - ஆஸ்திரேலியா 3வது போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றம்..! ஏன்?


மாரூப் 68 ரன்களும், ஆயிஷா 43 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ராகர் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீராங்கனைகள் களம் கண்டனர். யாஷ்டிகா பாட்டியா 17 ரன்களில் வெளியேற ஷெபாலி வெர்மா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்மன்பிரீத் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், ஜெமீமா ரோடிக்ரூஸ் - ரிச்சா கோஸ் இணை கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 



150 ரன்கள் இலக்கை இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் மட்டுமே இழந்து எட்டியது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரோடிக்ரூஸ் 53 ரன்களுடனும், ரிச்சா கோஸ் 31 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வெற்றி பெற்ற இந்திய வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | IND vs AUS: KL ராகுல் அணியில் எதற்கு? வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ