15:22 06-10-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!



அறிமுக நாயகனாக களமிறங்கி சதம் அடித்து அசத்திய ப்ரித்வி ஷா-விற்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது!



14:03 06-10-2018


40.4: WICKET! ஜடேஜா வீசிய பந்தில் கிரண் பவுள் 15(15) கேட்ச் கொடுத்து வெளியேறினார்!



தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 41 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்துள்ளது. டௌவர்விச் 10(35) மற்றும் தேவேந்திர பிஷூ 4(2) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



13:56 06-10-2018


கிரண் பவுள் அதிரடி ஆட்டத்தால் கனிசமான ரன்களை பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி!....


தொடக்க வீரராக  களமிறங்கிய கிரண் பவுள் 83(93) குவித்து அணிக்கும் பலம் சேர்த்தார். எனினும் இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ஷாய் ஹோப் 17(34), ஹெட்மையர் 11(11), அம்பிரிஸ் 0(3), சோஸ் 20(24) ரன்களில் வெளியேறினர். இந்நிலையில் டௌவர்விச், கீமி பவுள் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.


தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்துள்ளது. டௌவர்விச் 10(35) மற்றும் கீமி பவுள் 15(11) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியவை விட 296 ரன்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய தீவு அணி உள்ளது குறிப்பிடத்தக்கது!



 


1:47 06-10-2018


மூன்றாம் நாள் உணவு இடைவேளை நிலவரப்படி... இரண்டாம் இன்னிங்ஸை துவங்கியுள்ள மேற்கிந்திய தீவு 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் குவித்துள்ளது.



கிரண் பவுள் 21(22) மற்றும் ஷாய் ஹோப் 0(3) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஷ்வின் ஒரு விக்கெட் எடுத்துள்ளார்!



இந்தியா - மேற்கிந்தியத்தீவு அணிகள் மோதும் முதலவாதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது!


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கொட் சௌராஸ்ட்ரா கிரிக்கட் மைதானத்தில் ஆகஸ்ட 4-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது.


இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்தது. ப்ரித்வி ஷா, விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் சதங்களின் உதவியால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்தது. இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் கொள்வதாக அறிவித்தது. 


இந்திய அணி தரப்பில் விராட் கோலி 139(230), ப்ரித்வி ஷா 134(154), ஜடேஜா ஆட்டமிழக்காமல் 100*(132), ரிஷாப் பன்ட் 92(84), புஜாரா 86(130) ரன்கள் குவித்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டுகளை குவித்தார்.


இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை மேற்கிந்திய தீவுகள் அணி துவங்கியது. துவங்கியது முதலே மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர்.


இந்நிலையில் போட்டியில் மூன்றாம் நாளான இன்று மேற்கிந்திய தீவு அணி 48 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை விட 468 ரன்கள் பின்தங்கியுள்ளது.


மேற்கிந்திய தீவுகள் அணியினை பொருத்தவரை ரோட்சன் 53(79), கீமூ பவுள் 47(49) ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட், மொகமது ஷமி 2 விக்கெட் குவித்தனர்.



தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி 468 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் பாலோஆன் காரணமாக தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட நேர்ந்துள்ளது.