Ind vs Eng: முதல் ODI போட்டியை 66 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புனே: இன்று புனேயில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அதிரடியாக களம் இறங்கி மாபெரும் ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கிலும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 2-3 என்ற கணக்கிலும் இந்திய அணியிடம் பறிகொடுத்தது இங்கிலாந்து அணி.
புனேயில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. முதலில் மட்டை வீச களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை குவித்தது. ஷிகர் தவான் அற்புதமாக விளையாடி 98 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்..
318 ரன்களை இலக்காகக் கொண்டு கலம் இறங்கிய இங்கிலாந்து அணி, 42.1 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Also Read | வரி ஏய்ப்பு செய்தார் உதயநிதி ஸ்டாலின்; தேர்தல் ஆணையத்தில் AIADMK புகார்
போட்டியின்போது, ஸ்ரேயாஸ் ஐயரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் இன்னிங்ஸின் எட்டாவது ஓவரில், ஒரு சக்திவாய்ந்த ஷாட்டைத் தடுக்கும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் நின்றிருந்த இடத்தில் இருந்து இடதுபுறத்தில் டைவ் செய்து குதித்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR