டபுள் டமாக்கா ஆபர் போல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு  இப்போது டபுள் விருந்தாக இருக்கிறது உலக கோப்பையும், ஆசிய போட்டியும். முதன்முறையாக ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு, இந்த முறை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் படையை இந்த போட்டிக்கு அனுப்பி வைத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் பங்கேற்றிருந்தாலும், இந்தியஅணியைப் போல் பலம் வாய்ந்த அணியாக ஆசிய போட்டிகளில் ஒரு அணியைக் கூட குறிப்பிட முடியாது. ஏனென்றால் இந்திய அணியில் இடம்பிடிதிருக்கும் அத்தனை கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர்கள். அவர்களுக்கு நிகரான அனுபவம் கொண்ட வீரர்கள் வேறு எந்த அணியிலும் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Ind vs Aus: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு! சுப்மன் கில் விளையாடமாட்டார்!


ஆப்கானிஸ்தான் அணியில் வேண்டுமானால் ஒரு சில பிளேயர்கள் இருக்கின்றனர். அதனால் இந்திய அணி எளிதாக ஆசிய போட்டியில் சாம்பியனாகும் என கிரிக்கெட் தெரிந்த பிஞ்சு குழந்தை கூட சொல்லிவிடும். அதனை இப்போது இந்திய அணியும் நிரூபித்திருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. 


முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் சேர்ந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஷ்வால் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். அவருக்கு பிறகு களம் கண்ட திலக் வர்மா கேப்டன் ருதுராஜூடன் சேர்ந்து வங்கதேச பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். 



இருவரும் காட்டிய அதிரடியில் இந்திய அணி 9.2 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்து  அபார வெற்றி பெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 40 ரன்களும், திலக் வர்மா 26 பந்துகளில் 55 ரன்களும் எடுத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் ஆசிய போட்டி கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றிருக்கிறது. 


மேலும் படிக்க - Asian Games 2023: வரலாறு படைத்த இந்தியா! இதுவரை இல்லாத அளவுக்கு பதக்க எண்ணிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ