ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற வெவ்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியத் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த 5 பதக்கங்களில் சமீபத்தில் பதக்கமகா நேற்று முன் தினம் செக் குடியரசு நாட்டில் நடந்த மெட்டுஜி கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றார்.  இப்போட்டியில் அவர் 52.09 வினாடிகளில் பந்தயத் தூரத்தைக் கடந்து வெற்றி வாகை சூடினார். 


ஹிமா தாஸ் இதற்கு முன்னர் ஜகார்த்தா ஆசியப் போட்டியில் 50.79 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தாலும் அதைக்காட்டிலும் இப்போது 2 வினாடிகள் கூடுதலாகவே எடுத்துக்கொண்டுள்ளார்.


மேலும், 51.80 வினாடிகளில் ஹிமா தாஸ் பந்தயத் தொலைவைக் கடந்திருந்தால், உலக வெற்றியாளர் கோப்பை போட்டி தகுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கலாம். இதனை ஹிமா தாஸ் இழந்துவிட்டார்.


இதற்கு முன் கடந்த 2-ஆம் தேதி போலந்தில் நடைப்பெற்ற போஸ்னன் அத்தலெட்டிக் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.65 வினாடிகளில் கடந்தபோது இம்மாதத்தின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.


அடுத்ததாக, கடந்த 7-ஆம் தேதி போலந்தில் குட்னோ தடகளப் போட்டியல் 200 மீட்டர் ஓட்டத்தை 23.97 வினாடிகளில் கடந்து 2-வது தங்கப் பதக்கத்தை ஹிமா தாஸ் கைப்பற்றினார். அதன்பின், செக் குடியரசில் கிளாட்னோ அத்தெலடிக் மீட் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் தங்கமும் செக் குடியரசில் கடந்த புதன்கிழமை நடந்த தபூர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 23.43 வினாடிகளில் பந்தய தொலைவைக் கடந்து ஹிமா நான்காவது தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.