இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றிருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்தது. குரூப் சுற்றில் பாகிஸ்தானையும், ஹாங்காங்கையும் வீழ்த்தி கம்பீரமாக சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடமும், இலங்கையிடமும் இந்தியா தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்த ஆசிய கோப்பையில் ரசிகர்களுக்கான ஒரே ஆறுதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது மட்டும்தான்.


 



இதற்கிடையே ஆசிய கோப்பைக்கான அணி தேர்வு சிறப்பாக இருந்தது. ப்ளேயிங் லெவனில் வீரர்கள் தேர்வு தவறாக அமைந்ததுதான் இந்தியா தொடரிலிருந்து வெளியேறியதற்கான காரணம் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


இந்நிலையில் ஆசிய கோப்பையில் அடைந்த தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வு குழு அதிகாரியுமான சாபா கரீம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.



இதுதொடர்பாக பேசிய சாபா, “இந்திய அணியில் தனது ஹனீமூன் காலங்கள் முடிவடைந்துவிட்டதை ராகுல் டிராவிட்கூட அறிந்திருக்கிறார். அவர் சிறப்பாக செயல்பட முயற்சி செய்கிறார்.ஆனால் அத்தகைய முயற்சிகள் வெற்றியாக மாற்றப்படவில்லை. ராகுல் டிராவிட்டிற்கு இது நெருக்கடியான நேரம். 


மேலும் படிக்க | அரையிறுதியில் அசத்திய இளம் வீரர் கார்லோஸ்; இறுதிப்போட்டியில் காத்திருக்கும் காஸ்பர் ரூட்


உலகக் கோப்பை டி20 நடைபெறவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்த இரண்டு பெரிய ஐசிசி  சாம்பியன்ஷிப்களையும் இந்தியா வெல்ல முடிந்தால் மட்டுமே இந்திய அணிக்கு அவர் வழங்கிய உழைப்பு குறித்து திருப்தி அடைய முடியும்” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ