இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (2022 Birmingham Commonwealth Games) பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஹாக்கி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ஹாக்கி அணி இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த நிலையில், அடுத்து வரும் காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசியப் போட்டிகளில் இந்தியா அணி தங்க பதக்கம் வெல்லும் என்று ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியசூழலில், ஹாக்கி ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஞானேந்திரோ நிங்கோம்பம்( Gyanandro Ningombam) கூறுகையில், "காமன் வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகிறது. அதில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தான் 2024 பாரிஸ் நடைபெற உள்ள ஒலிம்பிக்கிற்கான தகுதி போட்டியாகும். எனவே அதற்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நிலையில், 32 நாட்கள் இடைவெளியில் இந்த போட்டிகள் நடைபெறுவதால், காமன் வெல்த் போட்டிகளில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திற்கு இந்திய வீரர்களை அனுப்பினால், அது தொற்று ப்ரவலுக்கு வழி வகுக்கும். இந்த நேரத்தில், அங்கு போட்டிகளில் பங்கேற்பது தொற்று பரவல் அபாயத்தை அதிகரிக்கும் " என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிவித்தார். 


ALSO READ | டி20 உலக கோப்பை 2021: எந்த அணியில் யார் யார் இடம் பெற்றுள்ளனர்!


பிரிட்டன் நாட்டில் அஸ்ட்ராஜெனகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டவர்களுக்கு, பிரிட்டன் நாட்டில் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி, அஸ்டிராஜெனகா தடுப்பூசி என்றாலும் கூட அதை பிரிட்டன் அங்கீகரிக்காமல், பிரிட்டன் நாட்டுக்குச் செல்லும் இந்தியர்கள், 72 மணி நேரத்திற்கு முன் RT-PCR பரிசோதனை சான்றிதழ் கொடுக்க வேண்டும், ஒரு வாரம் குவாரண்டைன் செய்ய வேண்டும் என்றும் குவாரண்டைன் காலம் முடிந்த பிறகு மீண்டும் RT-PCR பரிசோதனை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது. 


இத்தகைய சூழலில் பிரிட்டனில் இருக்கும் கொரோனா தொற்று தொடர்பான குவாரண்டைன் விதிகள் பாரபட்சமானதாக இருப்பதால் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | IPL 2021 Match 51: ராஜஸ்தான் ராயல்ஸை வென்ற மும்பை இண்டியன்ஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR