2017-ம் ஆண்டுக்கான, 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவின் 10 நகரங்களில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுவரை ஒன்பது ஐபிஎல் போட்டிகள் முடிந்துள்ளன. ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 42 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. 


சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.