இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 5-1 என்ற செட் கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் விராத் கோலி அபார சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு 35-வது சதம் ஆகும். இந்த தொடரில் அவருக்கு இது 3-வது சதம். இதன் மூலம், இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் 3 சதங்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பை விராத் பெற்றார்.


சர்வதேச கிரிக்கெட்டில், குறைவான போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் கோலி நிகழ்த்தினார்.


இந்தத் தொடரில் 6-வது ஒரு நாள் போட்டிகளிலும் சேர்த்து 558 ரன்கள் குவித்தன் மூலம், இரு அணிகள் இடையிலான தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய சாதனையையும் விராத் கோலி படைத்தார். 


இதற்கு முன், ஆஸ்திரேலிய தொடருக்கு எதிராக ரோகித் சர்மா 491 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.