இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. 


இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா 83 ரன்களும், முன்னாள் கேப்டன் டோனி 79 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் கோல்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், சம்பா, பக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 


இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு 282 ரன்களை இலக்காக இந்திய அணி அமைத்தது. இருப்பினும் மழையின் காரணமாக ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


21 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் சஹால் 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்களும் விழ்த்தினர்.


இதன்மூலம், 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 


83 ரன்கள் அடித்து, 2 விக்கெட் வீழ்த்திய இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்நிலையில் இரண்டாம் ஒருநாள் போட்டி வருகிற 21ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.