ஐஸ்லாந்து நாட்டில் நடைப்பெற்று வரும் சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஸ்லாந்தில் நடைப்பெற்று வரும் சர்வதேச போட்டியான சேட்லைட் உலகக் கோப்பை வாள்வீச்சு பந்தயத்தில் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை CA பவானி தேவி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.


முன்னதாக இவர் தனது காலிறுதி போட்டியில் பெரேட் ட்ரௌஸ் என்பவரினை 15-9 என்ற கணக்கிலும், இத்தாலியின் குயிலா ஆர்பினோவை 15-10 என்ற கணக்கில் அரையிறுதியில் வென்றதன் மூலம் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.



இறுதி போட்டியில் அமெரிக்காவின் அலெஸ் ப்ரவுனை எதிர்கொண்ட இவர் 10-15 என்ற கணக்கில் வெளியேறியதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தினை வென்றதாக தெரிகிறது.


கடந்தாண்டு நடைப்பெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது!