இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலை கழகத்தினை இம்பாலில் அமைக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய விளையாட்டு பல்கலை கழகத்தினை மணிப்பூர் மாநிலம், இம்பாலில் அமைக்கும் மசோதாவிற்கு கடந்த மே மாதம் 23-ஆம் நாள் அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 


இந்நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் இன்று இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 


விளையாட்டு கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சிறந்த, ஒழுக்கத்துடனான விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் இந்த பல்கலை அமைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பல்கலை கழகத்தினை அமைக்க மணிப்பூர் அரசால், இம்பால் மாவட்ட கவ்டுருக் பகுதியில் சுமார் 325.90 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட துறைகளை வளர்ச்சி அடைய செய்வதே இந்த பல்கலை கழகத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது!