AsianGames: குதிரையேற்றப் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் குதிரையேற்றப் பிரிவில் இந்தியாவின் ஃபவுட் மிர்ஷா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் குதிரையேற்றப் பிரிவில் இந்தியாவின் ஃபவுட் மிர்ஷா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்!
1982-ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டி குதிரையேற்றத்தில், தனி நபர் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது.
இப்போட்டிகளின் குதிரையேற்றப் பிரிவில் இந்தியாவின் ஃபவுட் மிர்ஷா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் ஜப்பான் வீரர் முதலிடத்தையும், சீன வீரர் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. இதேப்போல் குதிரையேற்ற போட்டியின் குழு பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த பதக்கங்கள் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் 7 தங்கம், 7 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. 72 தங்கம் உள்பட 162 பதக்கங்களுடன் தொடர்ந்து சீனா முதல் இடத்தில் உள்ளது.