இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. 


இதையடுத்து சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணலை இன்று பிற்பகல் 1 மணிக்கு மும்பையில் நடத்துகிறது. 


விண்ணப்பம் அளித்தவர்களில் முதன்மையானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 6 பேரிடம் இது தொடர்பாக அவர்களுக்கு இ-மெயில் மூலம் ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுவிட்டது.


அழைக்கப்பட்டுள்ள 6 பேரில் ரவிசாஸ்திரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 55 வயதான ரவிசாஸ்திரி இதற்கு முன்பு இந்திய அணியின் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.


நேர்காணலுக்கு பிறகு இன்றே புதிய பயிற்சியாளர் யார் என்ற விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிற்சியாளர் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை பதவியில் தொடருவார்.