இந்தோனேசிய ஓபன்: இந்திய வீரர்கள் பிரனோய் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் விளையாட, இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர்.
கால் இறுதியில் 19வது ரேங்க் வீரர் ட்ஸூ வெய் வாங்குடன் நேற்று மோதிய காந்த் 21-15, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்குடன் (சீனா) மோதிய பிரனாய் 21-18 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சென் லாங் 21-16 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடும் போராட்டமாக அமைந்த கடைசி செட்டில் பதற்றமின்றி விளையாடிய பிரனாய் 21-18, 16-21, 21-19 என்ற கணக்கில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதிக்கு காந்த், பிரனாய் முன்னேறியது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.