தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் கோப்பையை இழந்தது இந்திய அணி.


இந்நிலையில், இன்று முதல் ஒருநாள் இன்று டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் நான்கு மணிக்கு நடைப்பெற உள்ளது. இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 7 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதில் 6 தோல்வியும், ஒரு போட்டி முடிவு இல்லாமல் போனது.


ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் தரவரிச்சை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளதால், இந்த ஒருநாள் போட்டி தொடரை வெல்ல இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் எனபதில் ஐயமில்லை. 


மேலும் ஒரு வருடம் கழித்து இங்கிலாந்தில்(2019) உலகக் கோப்பை நடைபெற உள்ளதால், இந்த ஒருநாள் போட்டி தொடர் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.  
மேலும் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது.