மூன்று மாதங்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இன்று நடைபெற உள்ள முதல் டி-20 போட்டியில் இந்திய வேகபந்து வீச்சாளர் ஜாஸ்ரிட் பும்ரா மற்றும் ஆப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் இருவரும் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பும்ரா இல்லாததால் உமேஷ் யாதவ் அல்லது தீபக் சாஹர் வாய்ப்பு கிடைக்கலாம்.


இந்திய அணியைப் பொறுத்தவரை கடைசியாக விளையாடிய 20 டி-20 போட்டிகளில் 15 வெற்றிகளைப் பெற்று தன்னமிக்கையுடன் இருக்கிறது. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் பலத்துடன் இருக்கிறது. அந்த அணி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 6-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. 


கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் தோல்வியுற்றுள்ளது. அதேபோல இங்கிலாந்து மற்றும் இந்தியா 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 6-ல் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது இங்கிலாந்து அணி.


இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 
 



 



அணிகள் விவரம்:-


இங்கிலாந்து: Jason Roy, Jos Buttler(w), Joe Root, Eoin Morgan(c), Alex Hales, Jonny Bairstow, Moeen Ali, David Willey, Liam Plunkett, Chris Jordan, Adil Rashid, Dawid Malan, Sam Curran, Jake Ball, Tom Curran


இந்தியா: Rohit Sharma, Shikhar Dhawan, Lokesh Rahul, Virat Kohli(c), MS Dhoni(w), Dinesh Karthik, Hardik Pandya, Bhuvneshwar Kumar, Umesh Yadav, Krunal Pandya, Yuzvendra Chahal, Suresh Raina, Shreyas Iyer, Kuldeep Yadav, Siddarth Kaul, Deepak Chahar