இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்தது. ஒருவரிடமும் போராட்ட குணம் காண முடியவில்லை. ஏதோ வந்தோம், போனோம் என்ற நிலையில் தான் இந்திய வீரர்கள் ஆடுனார்கள் என்ற குற்றசாற்று எழுந்தது. 


5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற்றே ஆக வேண்டும், இல்லையென்றால் தொடரை இழக்க நேரிடும் என்ற சூழ்நிலையில் ஆடிய இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


தற்போது டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து இரண்டு முறையும், இந்தியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்று நான்காவது ஆட்டம் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பெற்றி பெற்று தொடரை 2-2 என சமநிலை பெருமா? அல்லது டிரா செய்து இங்கிலாந்துக்கு முற்றிபுள்ளி வைக்குமா? அல்லது இங்கிலாந்து தொடரை வெல்லுமா? என பல கேள்விகளுக்கு விடை அடுத்தடுத்த நாட்களில் கிடைக்க உள்ளது.


இன்றைய டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் அமைந்துள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.