INDvsSA: 2-வது ஒருநாள் - பலவீனமான நிலையில் தென்னாப்பிரிக்கா!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒருநாள் போட்டி இன்று சென்சூரியன் சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைப்பெறுகிறது!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒருநாள் போட்டி இன்று சென்சூரியன் சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைப்பெறுகிறது!
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
முன்னதாக, கடந்த பிப்., 1 ஆம் நாள் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் 6 ஒருநாள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வெற்றியின் பெருமையினை தக்கவைத்துக்கொள்ள இந்தியாவும், தோல்வி முகத்தை மறைக்க தென்னாப்பிரிக்காவும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த ஒரு நாள் தொடரானது ICC தரவரிசையில் முதலிடத்தை பெற்றுதர இரு அணிகளுக்கும் முக்கிய வாய்ப்பு என்பதால் இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் களத்தில் போரட உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் மாற்றங்கள் குறித்த தகவல்கள் இல்லை, அதேவேளையில் தென்னாப்பிரிக்கா தரப்பில் அணியின் தலைவர் டூ பிளஸிஸ்-க்கு முதல் ஒருநாள் போட்டியில் வலது கை விரலில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை சோத்தித்த மருத்துவர்கள் டூ பிளஸிஸ் 3 முதல் 6 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் டூ பிளஸிஸ், இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்கா வீரர் ஃபர்ஹான் பெஹர்தின் களமிரங்குவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிரடி நாயகன் ஏபிடி வில்லியர்ஸ் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார்.
இந்நிலையில் இன்றைய போட்டி தென்னாப்பிரிக்கா அணிக்கு சவாலாக அமைய வாய்ப்புள்ளது!