INDvsSA: இந்தியா வெற்றி பெற 205 ரன்கள் இலக்கு
6-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டாஸ் வென்ற இந்திய அணி, பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வெற்றி பெற 205 ரன்கள் தேவை.
தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட் இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது. ஆண்டில் 34(42) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் நான்கு விக்கெட்டும், யூசுவெந்திர சஹால் மற்றும் ஜாஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டும், குல்தீப் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. இம்ரான் தாகிர் 2(8) ரன்கள் எடுத்து அவுட்.
தற்போது தென் ஆப்பிரிக்கா 192/9 (ஓவர் 46)
ஆண்டில் 22(37)
லுங்குசனி நிக்டி 0(2)
தென்னாப்பிரிக்கா அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. மோரன் மோர்கெல் 20(19) ரன்கள் எடுத்து அவுட்.
தற்போது தென் ஆப்பிரிக்கா 188/8 (ஓவர் 44)
ஆண்டில் 20(34)
இம்ரான் தாகிர் 1(2)
தென்னாப்பிரிக்கா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. கயா ஸோண்டோ 54(74) ரன்கள் எடுத்து அவுட். கிறிஸ் மோரிஸ் 4(8) ரன்கள் எடுத்து அவுட்.
தற்போது தென் ஆப்பிரிக்கா 176/3 (ஓவர் 42)
மோனி மோர்கெல் 11(12);
ஆண்டில் 18(30)
தென்னாப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை யூசுவெந்திர சஹால் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டும், ஷர்துல் தாகூர் மூன்று விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.
தற்போது தென் ஆப்பிரிக்கா 139/3 (ஓவர் 33)
கயா ஸோண்டோ 48(64); கிறிஸ் மோரிஸ் 2(6)
தென்னாப்பிரிக்கா அணி 25 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது தென் ஆப்பிரிக்கா 116/3 (ஓவர் 25)
கயா ஸோண்டோ 44(54);
ஹெய்ன்ரிக் க்ளாசென் 6(13)
தென்னாப்பிரிக்கா அணி 21 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ஏபி டி வில்லியர்ஸ் 30(34) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை யூசுவெந்திர சஹால் எடுத்தார்.
தற்போது தென் ஆப்பிரிக்கா 108/3 (ஓவர் 22) கயா ஸோண்டோ 40(45); ஹெய்ன்ரிக் க்ளாசென் 2(5)
தென்னாப்பிரிக்கா அணி 15 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது.
ஏபி டி வில்லியர்ஸ் 11(22);
கயா ஸோண்டோ 12(19)
தென்னாப்பிரிக்கா அணி 12.1 ஓவரில் 50 ரன்களை கடந்தது. தென் ஆப்பிரிக்கா 50/2 (ஓவர் 12.1) ஏபி டி வில்லியர்ஸ் 10(15); கயா ஸோண்டோ 4(9)
தென் ஆப்பிரிக்கா 44/2 (ஓவர் 10) ஏபி டி வில்லியர்ஸ் 7(10); கயா ஸோண்டோ 1(1)
தென்னாப்பிரிக்கா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. ஹாஷிம் அம்லா 10(19) ரன்கள் கேட்ச் அவுட் ஆனர். இரண்டாவதாக ஐடின் மார்கரம் 24(30) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். இந்த இரண்டு விக்கெட்டையும் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.
6-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டாஸ் வென்ற இந்திய அணி, பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
6 ஒருநாள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த தொடரை வென்றதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சரித்திரம் படைத்தது கோலி தலைமையிலான இந்திய அணி.
இந்த சாதனை மூலம், இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் 122 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 121 புள்ளிகளில் இருந்து 118 புள்ளிகளுக்கு சரிந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இன்று செஞ்சூரியனில் நடைபெறும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 6_வது போட்டியில், ஒருவேளை இந்தியா தோற்றாலும், முதலிடத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணிக்கு ஒரு புள்ளி கூடும், தோற்கும் அணிக்கு ஒரு புள்ளி குறையும்.
6-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்கும்.