பும்ராவின் வேகத்தில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா! 210 ரன்களுக்கு ஆல் அவுட்!

3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் 1 - 1 என்று சமமாக உள்ளதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளும் தயாராக இருந்தனர். நேற்று கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்தியா 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா அணி விளையாடியது. ஆரம்பம் முதலே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். உமேஷ் யாதவ் மற்றும் பும்ராவின் பந்துகளில் போல் தெறித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் பீட்டர்சன் மட்டும் பொறுப்பாக விளையாடி 72 ரன்களை குவித்தார்.
இறுதியில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன் பிறகு 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மூன்றாம் நாளான நாளை நல்ல ஸ்கோரை எட்டும் பட்சத்தில் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு கடினமான இலக்கை வைக்க முடியும்.
ALSO READ | ஐபிஎல் 2022 - அகமதாபாத் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR