இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவிலுள்ள ''நியூ வண்டேர்ஸ் ஸ்டேடியத்தில்'' 24-ம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 187 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் கஜிஸோ ரபாடா மூன்று விக்கெட்டும், மோனி மோர்கெல், வெர்னான் பிலண்டேர் மற்றும் ஆண்டில் பெஹல்குவே தலா இரண்டு விக்கெட்டும், லுங்குசனி நிக்டி ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.


இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளில் தொடர்ந்து ஆடிய தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 194 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பாக பும்ராஹ் 5 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டும், முகம்மது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.


இதனையடுத்து 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. 


 



 


42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டம் ஆட உள்ளது. கே.எல் ராகுல் 16 ரன்களுடனும், முரளி விஜய் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.