2018 ஆம் ஆண்டு ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும், தென்னாப்பிரிக்கா அணி இப்போது இருப்பது போலவே மிகவும் வலுவாக இருந்தது. அந்தப் போட்டியில் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | 2nd Test: SA வெற்றி முகம்..! இந்தியாவை காப்பாற்றுவாரா வருண பகவான்?


கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்ததால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அன்றைய தினம் அதிர்ஷ்ட காற்று இந்தியா பக்கம் வீசியது. மிகச்சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி வீரர்கள், தென்னாப்பிரிக்காவை 177 ரன்களுக்குள் சுருட்டினர். அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


ALSO READ | WTC Table: டாப் 5-ல் வங்கதேசம், SA -ன் பரிதாபநிலை..! அப்போ இந்தியா?


அதேபோன்ற நிலைமை இப்போதைய ஜோகனஸ்பெர்க் டெஸ்ட் போட்டியிலும் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. இந்திய அணி வீரர்கள் துல்லியமாக பந்துவீசினால் நிச்சயம் தென்னாப்பிரிக்காவை சுருட்ட முடியும். ஏனென்றால் அவர்களுக்கான வரலாறு ஏற்கனவே இருக்கிறது. அதனை மனதில் வைத்து நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கினால் வெற்றி நிச்சயம். ரசிகர்களும், அந்த வரலாறு மீண்டும் திரும்புமா? என்ற எதிர்பார்ப்பில் 4வது நாள் ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்,  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR