இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் கடந்த டிசம்பர் 2-ம் நாள் தொடங்கி நடைபெற்று வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் (ஓவர் 127.5) எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. முதல் இன்னிங்ஸில் முரளி விஜய் 155(267) மற்றும் கேப்டன் விராட் கோலி 243(287) இருவரும் சதம் அடித்தனர். ரோஹித் ஷர்மா 65(102) அரைசதத்தை பூர்த்தி செய்தார்.


அதன் பின்னர் ஆடத்தொடங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


பின்னர் இந்திய அணி தங்களது 2_வது இன்னிங்ஸை தொடங்கியது. தவான் 67(91), புஜாரா 49(66), கோலி 50(58) மற்றும் ரோஹித் ஷர்மா 50(49) ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. 


410 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. கடைசி நாளான இன்று தொடர்ந்து இலங்கை விளையாடியது. தனன்ஜெயா டி சில்வா நிதானமாக விளையாடி தனது சதத்தை 188 பந்துகளில் பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டியில் இது அவருக்கு மூன்றாவது சதமாகும். இவர் 119 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.


5 விக்கெட் இழந்த நிலையில் ஆடி வந்த இலங்கை அணி, பின்னர் ரோசன் சில்வாவுடன் ஜோடி சேர்ந்த, இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நீரோஷன் டிக்வெல்ல இருவரும் நிதானமாக விளையாடினர். ரோசன் சில்வா 74(154) ரன்களும், நீரோஷன் டிக்வெல்ல 44(72) ரன்களும் எடுத்த நிலையில், இன்றைய ஆட்டம் முடிவுற்றது. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது.


இதன்மூலம் கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-௦ என்ற கணக்கில் வென்றது.