பெங்களூருவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது. கேப்டன் கருணரத்னே மட்டும் நிலைத்து நின்று விளையாடி சதமடித்தார். 107 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக குஷால் மென்டிஸ் 54 ரன்கள் சேர்த்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் ரேங்கில் முதல் இடத்தில் இந்திய வீரர்


மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், முடிவில் இலங்கை அணி 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 238 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் 15 டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்துள்ளது. அதேநேரம் ரோகித் சர்மா இந்திய அணிக்கு முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு தோல்வியை சந்திக்காத இந்திய அணி, 14வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்ந்து 14வது வெற்றியாகும். 



2013 ஆம் ஆண்டில் இருந்து 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 34 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. 6 போட்டிகளில் டிரா செய்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகனாகவும், ரிஷப் பன்ட் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டிக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் லக்மலை கட்டியணைத்து வழியனுப்பி வைத்தனர். பின்னர் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இந்த தொடரில் சிறப்பாக பங்களித்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும், ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டிய அவர், ஆல்டைம் கிரேட் என புகழாரம் சூட்டினார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR