ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் ரேங்கில் முதல் இடத்தில் இந்திய வீரர்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார் பும்ரா. ரிஷப் பன்ட் டாப் 5 பேஸ்ட்மேன்களில் இடம்பிடித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 04:37 PM IST
  • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை
  • முதல் இடத்தில் இந்திய வீரர் பும்ரா
  • டாப் 5க்கு முன்னேறிய ரிஷப் பன்ட்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் ரேங்கில் முதல் இடத்தில் இந்திய வீரர் title=

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியில் இரண்டு இந்திய வீரர்கள் டாப் 5 இடத்துக்கு முன்னேறியுள்ளனர். பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா 38 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்திலும், பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரிஷப் பன்ட் 517 ரன்களுடன் 4வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். இலங்கை தொடரில் சோபிக்க தவறிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டாப் 5 -ல் இருந்து வெளியேறியிருக்கின்றனர். 

மேலும் படிக்க | இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி - வெற்றி முனைப்பில் இந்தியா

ஜஸ்பிரித் பும்ரா 

பெங்களூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் இதுவரை ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். பேட்ஸ்மேன்களில் இலங்கைக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பந்த், இரண்டாவது இன்னிங்ஸில் 28 பந்துகளில் அரை சதம் அடித்து வரலாறு படைத்தார். இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பந்த் இப்போது பெற்றுள்ளார். அதே சமயம் பகல் இரவு டெஸ்டில் குறைந்த பந்தில் அரை சதமடித்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.  

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பும்ரா  

2021-2023 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிபில் ஜஸ்பிரித் பும்ரா 9 போட்டிகளில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் மூன்று முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதேபோல், முகமது ஷமியும் டாப் 5-ல் உள்ளார். 

மேலும் படிக்க | 40 வருட சாதனையை முறியடித்த ரிஷப் பன்ட் - 2 பந்தில் அப்ரிடி சாதனை மிஸ்

கோஹ்லி-ரோஹித் சரிவு 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை. சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 517 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். இலங்கை தொடரில் விளையாடாத கே.எல் ராகுல் 541 ரன்களுடன் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 1008 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News