#IndVsSL 2வது டெஸ்ட்: முரளி விஜய் அபார சதம்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், முகமது ஷமிக்கு பதிலாக ரோகித் ஷர்மா, முரளி விஜய், இஷாந்த் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அஸ்வின் (4), இசாந்த் சர்மா (3), ஜடேஜா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 8 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய், புஜாரா ஆகியோர் தலா 2 ரன்களுடனும களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முரளி விஜய் அரைசதம் அடித்தார். தற்போது முரளி விஜய் 219 பந்தில் 128 ரன்னும், புஜாரா 218 பந்தில் 78 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார்கள்.