INDWvsRSAW: தென் ஆப்பிரிக்கா-விற்கு வெற்றி இலக்கு 134 ரன்கள்!
இந்திய - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு வெற்றி இலக்காக 134 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
இந்திய - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு வெற்றி இலக்காக 134 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக 3 போட்டிகள் கொண்ட
ஒருநாள் தொடரினை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
இதனையடுத்து விளையாடிய டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்திய மகளிர் அணி வெற்றிப்பெற்றது. இதனால் 5 ஒருநாள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
இந்நிலையில் இன்று ஜொனஸ்பார்க் மைதானத்தில் 3-வது டி20 போட்டியில் இருஅணிகளும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றுகிறது. மேலும் தொடரை விட்டுக்கொடுக்காமல் இருக்க தென்னாப்பிரிக்கா வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இந்தியா பின்னர் தடுமாறியது, இதனால் 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா தரப்பில் ஹனிப்ரீட் கரூர் 48(30), மந்தனா37(24) ரன்களை குவித்தனர். இதர வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தென்னாப்பிரிக்க களம் இரங்குகிறது!