India in South Africa: ஷிகர் தவான் காயம்: முதல் டெஸ்ட்டில் ஆடுவது டவுட்!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று நள்ளிரவு தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றனர். மும்பையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து தென்ஆப்பிரிக்கா செல்கிறது இந்தியா அணி.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று நள்ளிரவு தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றனர். மும்பையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து தென்ஆப்பிரிக்கா செல்கிறது இந்தியா அணி.
விராட்கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். இருவரும் அங்கு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். புத்தாண்டை கொண்டாடியவுடன் அனுஷ்கா நாடு திரும்பி விடுவார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
> முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. மேலும் ஜனவரி 28-ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.
> பிப்ரவரி 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஒருநாள் போட்டிகள் நடக்கிறது. இதில் ஒரு போட்டியை தவிர மற்ற 5 ஆட்டங்களும் பகல்-இரவாக நடக்கிறது.
> பிப்ரவரி 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்துள்ளதை அடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவர் களமிறங்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
தொடக்க ஆட்டக்காரர் தவானுக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டுள்ளது. தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவரா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது என இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.