தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் சென்னையில் சுமார் 200 பேர் பங்கேற்கும் தேசிய நடைப்பந்தய போட்டி நடத்தப்படவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சாம்பியன்ஷிப் போட்டி இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.


நாளை அதிகாலை சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜிம்கானா கிளப் அருகில் இருந்து துவங்கும் இந்த போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளலாம். நாளை நடைப்பெறும் இந்த போட்டி 20 கிலோ மீட்டர் தூர அளவிற்கு நடைபெறும்.


இதனையடுத்து ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் நடைபந்தையம் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான 10 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் வரும் 17-ஆம் தேதியும் நடைபெறுகிறது.


இப்போட்டியில் முன்னணி வீரர்களான இர்பான், மனிஷ் சிங் ரவாத், வீராங்கனைகள் சவுமியா பேபி, ரவினா சந்தர், சாந்திகுமாரி உள்பட 200 பேர் கலந்து கொள்கின்றனர்.


இப்போட்டியில் வெற்றி பெற்று தகுதி இலக்கை எட்டும் வீரர்- வீராங்கனைகள் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை கத்தாரில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெறுவார்கள்.


இந்த போட்டியில் பங்கேற்க ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர்- வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அழைப்பை ஏற்று சீன தைபே, மலேசியா வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்துவதால் மற்ற நாட்டு வீரர்கள் வரமுடியவில்லை. 
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி நாளையும் (16-ஆம் தேதி), நாளை மறுநாளும் (17-ஆம் தேதி) நடைபெறுகிறது.