ஐக்கிய அரபு எமிரேட்ஸ் T10 எனும் புதிய கிரிக்கெட் வடிவம் ஒன்றினை அறிமுகப்படுத்த உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் அணியின் பிரபல அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடி, ஸ்ரீலங்காவின் குமார் சங்கக்காரா மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஈயோன் மோர்கன் ஆகியோர் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த T10 லீக்கில் பங்கேற்க உள்ளனர்.


இந்த போட்டிகள் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளன. மொத்தம் 90 நிமிடங்கள் (45 நிமிடங்கள் ஒவ்வொரு பக்கமும்) இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அணிக்கு பத்து ஓவர் வீதம் மொத்தம் 20 ஓவர்கள் கொண்டு போட்டிகள் நடத்தப்படும்.


2003-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் முதன்முதலில் T20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது, பிப்ரவரி 2005-இல் ஆக்லாந்தில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான T20 பேட்டியே முதல் சர்வதேச T20 போட்டி ஆகும்.


ஐந்து நாள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டி மற்றும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த போதிலும், அப்போது கொண்டுவரப்பட்ட T20 போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக நிலை நின்றது.


அதேப்போல் தற்போது அறிமுகமாக உள்ள T10 போட்டிகளும் ரசிகர்களிடையை பெரும் வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.