ஐ.பி.எல் 10-வது சீசனுக்கான, கிரிக்கெட் வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 359 வீரர்கள் ஏலத்துக்கு விடப்படுவர். ஆனால், அதிகபட்சமாக 78 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் முதல் வீரராக ஏலம் விடப்பட்டார். அவரை எந்த அணியும் வாங்கவில்லை. 


இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி வாங்கியுள்ளது. ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு வெளிநாட்டு வீரர் இவ்வளவு விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஐபிஎல் ஏலத்தின் விவரம்:-


* இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை 14.5 கோடி ஏலத்தில் எடுத்தது புனே அணி


* கோரி ஆண்டர்சனை (நீயூசிலாந்து) ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ்


* ஆஸ்திரேலிய வீரர் சீன் அபோட்டை ஏலத்தில் தற்போதுவரை எந்த அணியும் எடுக்கவில்லை.


* இந்தியாவின் ஆல்ரவுண்டர் இர்பான் பதானை எந்த அணியும் தற்போது வரை எடுக்கவில்லை


* நியூசிலாந்து அணியின் வீரர் ரோஸ் டெய்லர், குப்தில் ஆகியோர் ஏலம் போகவில்லை.


* கிரிஸ் ஜோர்டன் இதுவரை ஏலம் போகவில்லை.


* இலங்கை வீரர் ஆஞ்சலோ மேத்யூஸை ரூ. 2 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது


* பவான் நெஹியை ரூ. 1 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது