10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.


ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. கொல்கத்தாவிடம் 17 ரன்னில் அந்த அணி ஏற்கனவே தோற்று இருந்தது.


கொல்கத்தா அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தி ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.


இரு அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா 7 ஆட்டத்திலும், ஐதராபாத் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.