10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.


இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை பந்தாடிய கொல்கத்தா அணி, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருந்து கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது. 


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது முதல் இரு ஆட்டங்கள் முறையே புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளை எளிதில் வீழ்த்தியது. புதிய கேப்டன் மேக்ஸ்வெல்லின் அதிரடியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் இரு ஆட்டங்களிலும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்புடன் அந்த அணி வியூகங்களை வகுத்துள்ளது.


இந்நிலையில் ஐபிஎல் போட்டிஇன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.