10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. 


மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது. 


இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணியின் பார்த்திவ் படேல் தொடக்கத்தில் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. பார்த்திவ் படேல் 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 39 ரன்களை குவித்தார். பட்லர் 14 (11) ரன்களும், ரோகித் ஷர்மா 4 (4) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 


இதையடுத்து ஜோடி சேர்ந்த ராணா மற்றும் க்ரூனல் பாண்டியா கூட்டணி அதிரடி காட்ட மும்பையின் ஸ்கோர் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசிய க்ரூனல் பாண்டியா 37 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் பென் கட்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். க்ரூனலை தொடர்ந்து ராணா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஷ்வர் பந்தில் போல்டானார். 


இறுதியில் மும்பை அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.