ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகளை பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும். 


எனவே ஐதராபாத் அணிக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியை (டெல்லி, புனேக்கு எதிராக) தழுவியுள்ள ஐதராபாத் அணி சொந்த ஊரில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.


அதே சமயம் 9 வெற்றிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்தித்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கண்டிருந்தது.


இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.