ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. IPL தொடரின் 9 ஆவது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் இன்று 4 மணிக்கு தொடங்கியது. ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.


இருவரும், விக்கெட் இழக்காமல் பெங்களூரு பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். 52 பந்துகளில் சதமடித்த பேர்ஸ்டோ, 114 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அதைத்தொடர்ந்து டேவிட் வார்னரும் 54 பந்துகளில் சதமடித்தார். 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து, இமாலய இலக்கை நிர்ணயித்தது ஹைதராபாத்.


அதன்பின் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் பார்த்தீவ் படேல், 11 ரன்களில் முகமது நபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஹெட்மயர் மற்றும் ஏ.பி டிவில்லியர்ஸும் முகமது நபியின் பந்தில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். கேப்டன் விராட் கோலியும் 3 ரன்களில் ஆட்டமிழக்க, 7.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என்ற மோசமான நிலையில் தவித்தது பெங்களூரு. அதன்பிறகு கிராண்ட்ஹோம் மற்றும் பர்மன் ஜோடி சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பெங்களூரு. 118 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது.


ஹைதராபாத்தின் முஹம்மது நபி வெறும் 11 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.


 


ஹைதராபாத் அணி: 


டேவிட் வார்னர், ஜானி பியர்ஸ்டோவ் (WK), விஜய் ஷங்கர், மனிஷ் பாண்டே, முகமது நபி, தீபக் ஹூடா, யூசுப் பதான், புவனேஸ்வர் குமார் (C), ரஷீத் கான், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா


பெங்களூரு அணி: 


விராட் கோஹ்லி (C), பார்த்திவ் படேல் (WK), மோயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ், சிம்ரோன் ஹெட்மியர், ஷிம்ம் டூப், கொலின் டி கிராண்ட்ஹோம், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரயஸ் ரே பர்மன், யூசுந்தேந்திர சஹால்