சென்னை: IPL 2019 தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைஸ் ஹைதராபாத் அணிகளும் மோதின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்ப முதலே அதிரடியில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மனீஷ் பாண்டே* 83(49) மற்றும் யூசுப் பதான் 5(4) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் ஹர்பஜன் இரண்டு விக்கெட்டும், தீபக் சஹார் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 


176 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது சென்னை அணி. பிளெஸ்ஸிஸ் 1(7) ரன் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா மற்றும் ஷேன் வாட்சன் அதிரடியில் இறங்கினர். அணியின் ரன்-ரேட் உயர்ந்தது. ரெய்னா 38(24) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். பின்னர் அம்பதி ராயுடு மற்றும் ஷேன் வாட்சன் ஆடினார்கள். ஒரு கட்டத்தில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் மட்டும் எடுத்தார். அதில் 9 பவுண்டரியும், 6 சிச்சரும் அடங்கும். கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு இணைந்து நிதானமாக ஆடி வெற்றியை நோக்கி அணியை அழைத்து சென்றனர். 


வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் அம்பதி ராயுடு 21(25) ரன்களுடன் அவுட் ஆனர். 19.5 ஓவரில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த வெற்றி மூலம் 16 புள்ளிகளை பெற்று ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை மீண்டும் பிடித்தது. மேலும் 11 ஆட்டங்களில் ஆடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளை பெற்றதால், அடுத்த சுற்றான ஃபிளே சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த IPL 12 சீசனில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும்.


இதே எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி மும்பை அணியை சென்னை எதிர்க்கொள்கிறது.