2019 ஐபிஎல் பைனல்: காத்திருக்கும் பரிசு மழை!! யாருக்கு எவ்வளவு பணம்?
இந்த ஐபிஎல் சீசனில் வெற்றி பெரும் அணிக்கும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கும், மற்ற அணிகளுக்கு எவ்வளவு பரிசு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.....!!
இன்று 12வது ஐபிஎல் சீசனின் இறுதி நாள். IPL 2019 கோப்பையை யார் வெல்லபோவது? என்ற பலபரீட்சையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த யுத்தத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ? அந்த அணி தான் அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியாக திகழும்.
இந்த சீசனில் மொத்தம் 8 அணிகள் மோதின. அதில் சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நான்கு அணிகள் ஃபிளே-சுற்றுக்கு தகுதி பெற்றது. மும்பை அணி இறுதிபோட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதேபோல மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்ற நாக்-அவுட் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்று குவாலிபைர் 2 சுற்றுக்கு தகுதி பெற்றது.
குவாலிபைர் 2 போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற சென்னை அணி 8 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.
இந்த ஐபிஎல் சீசனில் வெற்றி பெரும் அணிக்கும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கும், மற்ற அணிகளுக்கு எவ்வளவு பரிசு கிடைக்கும். ஆரஞ்சு கேப் மற்றும் ஊதா கலர் கேப் வீரர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.....!!
அணிகள்:
வெற்றி பெரும் அணிக்கு ரூ 25 கோடி
2_வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ 12.5 கோடி
3_வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ 10.5 கோடி (Delhi Capitals)
4_வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ 8.5 கோடி (Sunrisers Hyderabad)
வீரர்கள்:
மிகவும் மதிப்புமிக்க வீரர்(Most Valuable Player) : ரூ 10 லட்சம்
அதிக ரன்கள் அடித்த வீரர்(Orange Cap): ரூ 10 லட்சம்
அதிக விக்கெட் எடுத்த வீரர் (Purple Cap): ரூ 10 லட்சம் (தற்போதைய நிலவரப்படி, அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதல் இடத்தில் காகிஸோ ரபாடா (25 விக்கெட்) உள்ளார். அடுத்த இடத்தில் CSK ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் (24விக்கெட்) உள்ளார். இன்றைய போட்டியில் விளையாடும் இம்ரான் தாஹிர் விக்கெட் எடுக்கும் பட்சத்தில் முதல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.