பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி
ஃப்ளா-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்ட கொல்கத்தா அணி.
மொஹாலி: IPL 2019 தொடரின் 52-வது லீக் ஆட்டம் நேற்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
இரண்டு அணிகளும் 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் இருந்த கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிக்கு நேற்றைய போட்டி மிகவும் முக்கியமானதாக இருந்தது, போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு ஃப்ளா-ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு கடைசி வாய்ப்பு கிடைக்கும். அதேவேளையில் தோல்வியுறும் அணி ஃபிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்ற நிலையில், இரண்டு அணிகளும் களம் கண்டனர்.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், அதன் பின்னர் ஆதிரடியாக விளையாடி ஆறு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்ப முதலே அதிரடியில் இறங்கினர். பஞ்சாப் பந்து வீச்சை நான்கு புறங்களிலும் விளாசினர். 18 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் ஃப்ளா-ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை சரியாக கொல்கத்தா அணி பயன்படுத்திக் கொள்ளுமா என்பது அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே அமையும்.
பஞ்சாப் அணி ஃபிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.