அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்து முடிந்தது. 351 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியது மற்றும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் நிலவரம் குறித்து பார்போம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. 2016 & 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு ஐபிஎல் சீசனில் விளையாடாத சென்னை அணி, கடந்த முறை 2018-ல் களமிறங்கின. இரண்டு ஆண்டு கழித்து களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2018 கோப்பையை வென்று அசத்தியது. 


இந்த ஆண்டும் சென்னை அணி கோப்பையை வெல்லும் என தமிழக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2019 சீசனில் சென்னை அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.


 



சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 22 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 24 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.


ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. மோஹித் சர்மா
2. ருத்ராஜ் கெய்க்வாட்.


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, பஃப் டூ பிளெசிஸ், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, சாம் பில்லிங்ஸ், மிட்செல் சாட்னர், டேவிட் வில்லெ, டுவேன் பிராவோ, ஷேன் வாட்சன், லுனங்கி ஏகடி, இம்ரான் தாஹிர், கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், தீபக் சாஹார், கே.எம். ஆசிஃப், கர்ன் ஷர்மா, துருவ் ஷூரி, என் 
ஜக்டிசன், சர்துல் தாகூர், மோனு குமார், சைதன்யா பிஷ்னோய்.