டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இஷாந்த் சர்மா காயத்தால் IPL தொடரில் இருந்து விலகியுள்ளதால் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா (Ishant Sharma). இவர் ஐபிஎல் தொடரில் இசாந்த் சர்மா டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே காயத்தால் அவதிப்பட்டதால் டெல்லி அணிக்காக தொடர்ந்து விளையடவில்லை. அவருக்கு கடுமையான உள்காயம் ஏற்பட்டதால் விலகியதாக தெரிய வந்துள்ளது. அடுத்தடுத்து இரண்டு வீரர்களை இழந்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.


இஷாந்த் சர்மாவின் நெஞ்சுக் கூட்டில் உள்ள தசை நார் கிழிந்து இருப்பதாக தெரிய வந்தது. அவர் காயம் குணமாக பல நாட்கள் ஆகும் என்பதால் அவர் 2020 IPL தொடரில் இருந்து விலகி உள்ளார். டெல்லி அணியில் இருந்து பாதி தொடரில் விலகும் இரண்டாவது வீரர் இஷாந்த்.



ALSO READ | IPL 2020: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி!!


டெல்லி அணி உடனடியாக இஷாந்த் சர்மாவுக்கு மாற்று வீரர் வேண்டும் என IPL நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது. மாற்று வேகப் பந்துவீச்சாளர் அவசியம் என கருதுகிறது டெல்லி அணி. இஷாந்த் சர்மா கட்டுக் கோப்பாக பந்து வீசுவார். அவருக்கு இணையான மாற்று வீரரை விரைவாக தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது டெல்லி.


சில நாட்கள் முன்பு அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். அவருக்கு இன்னும் மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை டெல்லி அணி. இந்நிலையில், இஷாந்த் சர்மா விலகி உள்ளார். மற்றொரு முக்கிய வீரரான ரிஷப் பண்ட் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டார். பண்ட் இல்லாதது டெல்லி அணிக்கு பெரும் இழப்பாக மாறியது.