IPL 2020: 37 ரன்கள் வித்தியாசத்தில் RR-யை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!!
37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது..!
37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது..!
IPL 2020 தொடரின் 12-வது லீக் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 174 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் மிரட்டினார். எனினும், அந்த அணிக்கு 175 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. பேட்டிங்கில் சொதப்பிய அந்த அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். 7 பந்துகள் ஆடிய ஸ்மித் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த சஞ்சு சம்சங் 9 பந்து வீச்சில் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். சற்று நிதானமாக ஆடிய பட்லர் 16 பந்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
ALSO READ | மறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?...
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால், 14.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணியின் டாம் கரன் 36 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.