IPL 2020: மும்பை இந்தியன்ஸ் 5வது முறையாக IPL Champions பட்டத்தை கைபற்றியது!
ஐந்தாவது முறையாக மும்பை அணி IPL சாம்பியன் பட்டத்தை கைபற்றியுள்ளது. ஏற்கனவே மும்பை அணி 2013, 2015, 2017, 2019 என நான்கு முறை பட்டத்தை வென்றது.
IPL 2020 Final MI vs DC: இந்தியன் பிரீமியர் லீக் 2020 சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்தாவது முறையாக மும்பை அணி IPL சாம்பியன் பட்டத்தை கைபற்றியுள்ளது. ஏற்கனவே மும்பை அணி 2013, 2015, 2017, 2019 என நான்கு முறை பட்டத்தை வென்றது.
இன்றைய IPL 2020 இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதின. இந்த இறுதிபோட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் டெல்லி அணி எடுத்தது.
மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி சாதனையை நிகழ்த்தியது. இந்த மும்பை அணி ஐந்தாவது முறையாகவும் மற்றும் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இரண்டு சீசன்களில் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணியாக மும்பை அணி உள்ளது. கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சென்னை அணி தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயரின் டெல்லி அணி முதல் முறையாக ஐபிஎல் இறுதிபோட்டிக்கு நுழைந்தது. ஆனால் வெற்றி பெறவில்லை.
டெல்லி அணிக்காக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்தார். இவர் இந்த சீசனில் 500 ரன்களை நிறைவு செய்துள்ளார். இந்த தொடரில் முதல் முறையாக ரிஷப் பந்தின் பேட் அதிரடி காட்டியது. ஐபிஎல் 2020 இல் தனது முதல் அரைசதம் அடித்தார். 38 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த பின்னர் பெவிலியனுக்கு திரும்பினார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR