Kings XI Punjab vs Kolkata Knight Riders: ஐ.பி.எல் 2020 இன் 46 வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மந்தீப் சிங் மற்றும் கிறிஸ் கெய்ல் (Chris Gayle) இருவரும் பஞ்சாப் அணிக்காக அதிரடி இன்னிங்ஸ் விளையாடினர். இருவரும் அரைசதம் அடித்தனர். பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) பதிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் அணிக்காக மந்தீப் சிங் (Mandeep Singh) அதிகபட்சமாக 56 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். கிறிஸ் கெய்ல் 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்தார். கே.எல்.ராகுல் 25 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரன் 2 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்ஸை மந்தீப் தனது தந்தைக்கு அர்ப்பணித்தார். இவரது தந்தை சில நாட்களுக்கு முன்பு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



ALSO READ | Tour of Australia: டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு


முன்னதாக, கே.கே.ஆரின் (Kolkata Knight Riders) அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சுப்மான் கில் (Shubman Gill) 57 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்தார். கில் தவிர, கேப்டன் எயோன் மோர்கன் 25 பந்துகளில் 40 ரன்கள் என பங்களித்தார். லாக்கி பெர்குசன் கடைசி ஓவரில் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இந்த மூவரையும் தவிர, எந்த பேட்ஸ்மேனும் சரியாக  ரன்கள்எடுக்க முடியவில்லை. பஞ்சாப் அணிக்கு முகமது ஷமி 3, கிறிஸ் ஜோர்டான், ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR