கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 18.5 ஓவர்களில் 150 ரன்களை இலக்காகக் கொண்டு ஆட்டத்தைத் தொடங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மந்தீப் சிங் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்தார். அவரின் இந்த அருமையான ஆட்டத்திற்காக அனைவரும் பாராட்டும் போது, அவருடைய துக்கம் சற்று குறைதிருக்கலாம்.
மந்தீப் சிங் ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக துபாயில் இருக்கும் நிலையில், அவரது தந்தை ஓரிரு நாட்களுக்கு முன்பு காலமானார். இந்த இக்கட்டான நிலையிலும் அவர் மன உறுதியுடன் இருந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
 தந்தையின் இறுதிச் சடங்குகளில் மந்தீப் சிங் கலந்துக் கொள்ள முடியாத நிலையில், அவர் வீடியோ மூலம் தந்தைக்கு பிரியாவிடை கொடுத்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் மந்தீப் மட்டையை சுழற்றிய விதம் அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியது என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறினார்.


போட்டி முடிந்த பின் பேசிய அணியின் கேப்டன் ராகுல், மிகப் பெரிய துக்கம் இருந்தபோதிலும், தனது கடமையில் கருத்தாய் இருந்த மந்தீப் சிங்கை பாராட்டினார். கூறினார்.


அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான முருகன் அஸ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரின் அற்புதமான செயல்பாடுகளுக்கு, அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தான் காரணம் என்று அவரையும் பாராட்டினார்.


“எங்கள் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருக்கும்போது, எங்களிடம் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அணியின் முழுமையான முயற்சி, பயிற்சியாளர்களுக்கு தான் அனைத்து பெருமையும் போய்ச் சேரும்”என்றார் ராகுல்.


இந்த வெற்றியின் மூலம், ஐந்தாவது இடத்தில் இருந்த பஞ்சாப் அணி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


கே.கே.ஆர் அணிக்கு அதிகபட்ச ரன்களை எடுத்தார் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில். கில் தனது அணிக்காக 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார், ஸ்கிப்பர் ஈயோன் மோர்கன் (Eoin Morgan), 40 ரன்கள் எடுத்தார். மூன்று விக்கெட்டுகளை இழந்த பின்னர், நான்காவது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த ஆட்டக்காரர்கள் 81 ரன்கள் குவித்தனர்.


"துரிதமாக அவுட்டானது ஏமாற்றம் கொடுத்தது. நாங்கள் அதிக ரன்கள் எடுக்க முடியும் என்று நினைத்தோம். மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் கூட எங்கள் பேட்டிங் இணை நல்ல ஸ்கோர் எடுக்க முடியும் என்று நினைத்தோம் 180 முதல் 190 வரை ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்ததால் நிலைமை மாறிவிட்டது” என மோர்கன் கூறினார்.


Also Read | IPL 2020 Match 45: மும்பை இண்டியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், In Pics


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR